குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் சற்று நிம்மதி

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து  ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5  உயர்ந்து ரூ.4840-க்கு விற்பனை செய்யப்பட்டது.இதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து ரூ.66.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.66,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம்  5 ரூபாய் குறைந்து  4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 66.50 எனவும், ஒரு கிலோ ரூபாய் 66500 ஆகவும் விற்பனையாகி வருகிறது.