அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..

 
இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலை நிலவரம் !


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக  ரூ.200 குறைந்துள்ளது.   

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

தங்கம் விலை திடீர் திடீரென எற்ற இறக்கங்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் அண்மைக்காலமாக அதாவது உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு  நாள்தோறும் தங்கம் விலை அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.. ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாளே  விலை உயர்வதுமாக இருப்பதால் நகை வாங்குவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  கடந்த ஜூன் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனையானது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் மறுநாளான ஜூன் 2ம் தேதி தங்கம் விலை ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,080 ஆக அதிகரித்தது. ஜூன் 3 ஆம் தேதி  யாரும் எதிர்பாராத விதமாக  தங்கம் விலை 400 ரூபாய் வரை ஏற்றம் கண்டது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

பின்னர்  அடுத்தநாளே (ஜூன் 4) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்து ஒரு கிராம்   ₹4,775-க்கும், ஒரு சவரன் ₹38,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்   இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 200- ரூபாய் சரிந்திருக்கிறது.   சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, 4,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, 38,080 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது.  அதேபோல் சென்னையில்  இன்று சில்லறை விற்பனையில்   ஒரு கிராம் வெள்ளி 67.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 67,700க்கும்  விற்பனையாகி வருகிறது.