அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 480 உயர்வு..

 
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..  சவரனுக்கு ரூ. 480 உயர்வு..


 சென்னையில் இன்று  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 வரை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.  இதனால் நகைப்பிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை திடீர் திடீரென எற்ற இறக்கங்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும்,  ஆனால் அண்மைக்காலமாக அதாவது உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு  நாள்தோறும் தங்கம் விலையில்  அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.  ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாளே  விலை உயர்வதுமாக இருப்பதால் நகை வாங்குவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  கடந்த ஜூன் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனையானது.  ஆனால் மறுநாளான ஜூன் 2ம் தேதி  ரூ.160 ம்,  ஜூன் 3 ஆம் தேதி 400 ரூபாய் வரையிலும்  ஏற்றம் கண்டது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..  சவரனுக்கு ரூ. 480 உயர்வு..

பின்னர்  அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, நேற்றைய தினம்   ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. அதன்படி நேற்று  ஒரு கிராம் ரூ.4,775-க்கும் , ஒரு சவரன்  ரூ.38,200-க்கும் விற்கப்பட்டது.  இந்நிலையில் இன்று அதிரடியாக  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 வரை உயர்ந்திருக்கிறது.  சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.4,835-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் கொண்ட ஒரு ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ரூ.38,680-க்கு விற்பனையாகிறது.   அதேபோல்   சென்னையில் நேற்று 67 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, இன்று 50 காசுகள் உயர்ந்திருக்கிறது.  அதன்படி இன்று  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி  விலை  ஒரு கிராம் ரூ.67.50 க்கும்,   ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500-க்கும் விற்கப்படுகிறது.