தொடர்ந்து குறையும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய்குறைந்து ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.  நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. . இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்க கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து, ரூ. 4,685 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி ஒரு கிலோ  ரூ.61,000க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 4,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  வெள்ளியின் விலையில் கிராமுக்கு 50 பைசா அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.61.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ  61,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.