அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ.62.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது..

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 200 காசுகள் குறைந்து ரூ.62.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.