தங்கம் வாங்க சரியான நேரம் - அதிரடியாக குறைந்த விலை

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், நேற்று குறைந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,880க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,735க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் வெள்ளியின் விலை 200 காசுகள் குறைந்து ரூ.62.30க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 45ரூபாயும், சவரனுக்கு 360 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் 45 ரூபாய் குறைந்து,  4,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  வெள்ளி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 80 பைசா குறைந்து, ரூ.60.50 ஆகவும், கிலோவுக்கு 1,800 ரூபாய் சரிந்து, ரூ.60,500 ஆகவும் விற்கப்படுகிறது.