வாரத்தின் முதல் நாளிலேயே ஏற்றம் கண்ட தங்கம் விலை - இல்லத்தரசிகள் கலக்கம்

 
gold gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து  40 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் குறைந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனை ஆனது. இதேபோல் ஒரு கிராம் ரூ. 5,106க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ71.600க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.71.60 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து ரூ.5,045 ஆகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து  40 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 90 காசு உயர்ந்து,  ரூ.72.50 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.72,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.