தங்கம் விலை மீண்டும் உயர்வு - இன்றைய விலை என்ன தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 38,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம்  5 ரூபாய் குறைந்து  4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 66.50 எனவும், ஒரு கிலோ ரூபாய் 66,500 ஆகவும் விற்பனையானது.

gold

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 38,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5  உயர்ந்து ரூ.4840-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.