"அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை " - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
tn

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

tn

படித்த இளைஞர்கள் உட்பட பலரும் அதிகம் விரும்புவது அரசாங்க வேலையை தான். அரசாங்க வேலை என்றாலே பணி சுமை நிறைய இருக்காது , கை நிறைய சம்பளம் என்ற  எண்ண ஓட்டம் பலர் மத்தியில் உள்ளது. அதேசமயம் அரசு ஊழியர்கள் இதை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற கருத்தும்  உள்ளது. இந்த சூழலில் பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்து அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்துதற்கு எதிரான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

tn

இந்நிலையில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக கைபேசி பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்  நீதிபதி எஸ்.எம்.  சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார் .

madurai high court

அலுவலக நேரத்தில் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்திய வீடியோ எடுப்பது தொடர்பான விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ள அவர்,  அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய மற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது நல்ல நடவடிக்கை அல்ல என்பதை குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 4 வாரங்களில் இந்த உத்தரவை நிறைவேற்றவும் ஆணையிட்டுள்ளார்.