தமிழகத்தில் ஊழல் : நீதிமன்றத்தை பாஜக நாடும் என அண்ணாமலை அறிவிப்பு!!

 
ttn

கர்ப்பிணிகளுக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

annamalai

சென்னை கமலாயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தரப்பிடம் ஆதரங்களுடன் புகார் தர உள்ளோம். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை பாஜக நாடும். எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார்.

annamalai stalin

தொடர்ந்து பேசிய அவர், அம்மா நியூட்ரிஷியன் கிட்டில் உள்ள ஹெல்த் மிக்ஸ் வாங்குவதில் தமிழக அரசுக்கு 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இதற்கு முன்பாக நியூட்ரிஷியன் ஹெல்த் மிக்ஸில்  மார்ச் மாதம் 31ஆம் தேதி ஆவின் நிறுத்திக் சேர்க்க வேண்டும் என்று வல்லுநர் குழு கூறியுள்ளது . அதன்பிறகு ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.  ஆவின் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் பயன்பாட்டிற்கு பதிலாக pro-pl நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இவை டெண்டர் வருவதற்கு முன்பாகவே அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.  இதே நியூட்ரிஷியன் கிட்டில் வழங்கப்படும் இரும்பு சத்து டானிக்  வாங்குவதில் 32 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.