கர்நாடக அரசின் அடாவடித்தனம்...மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம்!!

 
tn

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

duraimurugan

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், " என்று முடியும் இந்த சுதந்திர தாகம் போல் , என்று முடியும் இந்த காவிரி போராட்டம்?  முன்னாள் முதல்வர் அண்ணா முதல் இன்றைய முதல்வர் ஸ்டாலின் வரை காவிரி பிரச்சினையில் போராடுகிறோம் . காவிரி பிரச்சினையில் கர்நாடகம் அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக இருக்கின்றனர். கர்நாடகாவில் அனைத்துக் கட்சியினரும் காவிரிப் பிரச்சினையில் ஒரே அணியில் இருக்கின்றனர் . தமிழ்நாட்டில் திமுக கொண்டு வரும் தீர்மானத்தை அதிமுகவும்,  அதிமுக கொண்டு வரும் தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது. காவிரி பிரச்சினையில் யார் சரியாக செயல்பட்டார்கள் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவும் அனுமதி தரக்கூடாது "என்றார்

ytn

தொடர்ந்து பேசிய அவர், எந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் சரி காவிரி விவகாரத்தில் அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழ்நாட்டை நடத்துகிறார்கள்.  உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கர்நாடகம் கூறுவது அடாவடித்தனம் என்று சட்டப்பேரவையில்   அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசினார்.அத்துடன் காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும் என்று கூறினார்.