‘கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’க்கு தேர்வுக்குவு அமைப்பு - தமிழக அரசு..

 
தமிழக அரசு

 ‘கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’க்கான , விருதாளரை தேர்வு செய்ய   3 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,.  

கட்சியின் சரித்திர நாயகன்! பழுத்த அரசியல்வாதி!! கலையுலகின் ஜாம்பவான்!! இதுவே கலைஞர்…

தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கடந்த மாத்ம் 27 ஆம் தேதி, தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும்  வாழ்நாள் சாதனையாளருக்கு  'கலைஞர் கலைத்துறை வித்தகர்' என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என  சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளன்று, கலைத்துறையில்  இருந்து தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று  கூறப்பட்டது. அத்துடன் அன்றைய தினம், நினைவுப்பரிசும், ரூபாய் 10 லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

தமிழக அரசு - பரிசு அறிவிப்பு

இந்நிலையில் தற்போது,   கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது பெறும் விருதாளரை தேர்வு செய்ய தமிழக அரசு 3 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது.    இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சங்கத் தலைவர்  நாசர் , கரு . பழனியப்பன்  ஆகிய 3 பேரும்  குழுவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்த் திரையிலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது ஜுன் 3 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.