இந்து மாணவிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் அரசு பள்ளி ஆசிரியை! அதிர்ச்சி வீடியோ

 
k

அரசு பள்ளி ஆசிரியை மாணவ-மாணவிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும்,  கிருஸ்தவ மத போதனைகளை செய்ய செல்வதாகவும் இந்து கடவுள்களை அவதூறாக பேசுவதாகவும் மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி.   இப்பள்ளியின் மாணவி ஒருவர் தங்கள் பள்ளி ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக போலீசில் புகார் கூறியிருக்கிறார்.

kv

 கண்ணாட்டுவிளை பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.   இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை,    இந்துமத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசி வருகிறார்.   கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய சொல்லி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 இதையடுத்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.   பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவல் அளித்து அவர்களுடன் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

 போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை  முன்வைத்து இருக்கிறார்கள்.  இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் போலீசார் முன்னிலையில் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில் ,   மதமாற்ற சர்ச்சை வீடியோ தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட பட்டிருக்கிறது.   இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.    விசாரணைக்கு பின்னர் துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.