விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் தொகுப்புகள் - மாநில அரசு ரூ.15 கோடி ஒதுக்கீடு!!

 
mrk panneerselvam

உழவர் பெருமக்களுக்குத் தேவையான வேளாண் கருவிகள் தொகுப்புகள் வழங்குவதற்காக மாநில அரசு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வை வளமாக்குவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-22 ஆம் ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் "உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் திட்டம்" முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு, 14 கோடியே 89 இலட்சம் ரூபாய் மானியத்தில் 65,734 சிறு, குறு விவசாயிகளுக்கு கருவித் தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட்டன. 

வேளாண் கருவிகள் வழங்கும் திட்டத்தின் நோக்கமும் பயனும் 

mrk

வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு நிறைய நவீன இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்தாலும், அன்றாட சாகுபடிப் பணிகளில் கடப்பாரை, மண்வெட்டி போன்ற கருவிகள் விவசாயிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய வேளாண் கருவிகளை சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் செலவு குறையும் என்பதுடன், அவர்களின் சாகுபடிப் பணியும் எளிதாகிறது. 

நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பு

mrk

வேளாண் பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திடும் வகையில், "வேளாண் கருவிகள் தொகுப்பு", 2022-23 ஆண்டிலும் ஒரு இலட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு 15 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்" என 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 

சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். இந்தக் குழுவானது, தமிழகத்தில் தற்போதுள்ள பாறு கழுகுப் பகுதிகளை கண்காணித்தல், பாதுகாத்தல் மற்றும் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள பாறு கழுகுகளின் தரவுகளைப் பெற்று, பாறுமண்டலங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பாறு கழுகுகள் இறப்பதற்கு முக்கிய காரணமான கால்நடை மருந்துகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த இக்குழு செயல்படும். பாறு கழுகு
பராமரிப்பு, மீட்பு, மறுவாழ்வு மற்றும் இனப்பெருக்க மையங்களை அமைத்தல் மற்றும் பாறு கழுகு பாதுகாப்புக்காக பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை குழுவின் முக்கிய பணியாக இருக்கும்.
மாநில அளவிலான இக்குழுவின் பங்கு மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:

mrk
1. 2022-2025 ஆம் ஆண்டிற்கான பாறு கழுகு பாதுகாப்புக்கான தமிழ்நாடு செயல்
திட்டம் (TNAPVC) தயாரித்தல் 2. பாறு கழுகுகளின் முக்கிய உணவான கால்நடைகளின் சடலங்களில் விஷம்
உண்டாவதைத் தடுத்தல்.
3. இறந்த கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிருவகித்தல் மற்றும் கால்நடைகளின்
சடலத்தின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்தல்.
4. பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்படாத வனப்பகுதிகளில் வன விலங்குகளின்
சடலங்களை முறையாக அப்புறப்படுத்துதல். 
5. பாறு கழுகுகளுக்கு வழங்கப்படும் நச்சுத்தன்மையுள்ள மருந்துகளை தடை
செய்வதற்கான ஒருங்கிணைந்த, நன்கு நிறுவப்பட்ட மற்றும் திறமையான
ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துதல். 

mrk
6. பாறு கழுகு பாதுகாப்பிற்கென இனப்பெருக்க மையங்களை அமைத்தல். 
7. காயம்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட பாறு கழுகுகளைப் பராமரிப்பதற்காக பாறு கழுகு மீட்பு மையங்களை அமைத்தல்.
8. நாடு தழுவிய பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் பங்கேற்பது. பாறு கழுகுகளின்
இருப்பிடங்களைக் கண்டறிதல், தகுந்த இடைவெளியில் பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் பணித்திறனை வளர்த்தல். 
9. தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பாறு கழுகுகளின் எண்ணிக்கையை தொடர்ந்து
கண்காணித்தல். 
10. தமிழ்நாட்டில் கழுகு பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் கழுகு
பாதுகாப்பு மண்டல வலையமைப்பை மேம்படுத்துதல். 
11. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி முயற்சிகள் மற்றும் களக் கல்வி பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பாறு கழுகு இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல்.இந்த குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். தமிழகத்தில் பாறு கழுகுப் பாதுகாப்புக்கான பயனுள்ள கட்டமைப்பை உருவாக்க, தமிழக அரசின் இந்த முயற்சி வழி வகுக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.