நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு !!

 
tnpsc

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை  குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.  அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. நாளை இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதன் முடிவுகள் ஜூலை 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப்-2 குரூப்-2ஏ  தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 

TNPSC

மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. குரூப்-2 குரூப்-2ஏ  விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளம் வாயிலாக  ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

tnpsc

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நாளை  நடத்தப்படும்  குரூப் 2 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவை 9.47 லட்சம் பேரும், பொது ஆங்கிலம் பிரிவை 2.31 லட்சம் பேரும் தேர்வு செய்துள்ளனர். இதற்கேற்ப தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கினாலும், காலை 8.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என்றும் அதிகபட்சமாக காலை 8.59 மணி வரைக்குள் வருபவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tnpsc3

தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் மற்றும் நகலை கொண்டு வர வேண்டும். அத்துடன் இத்தேர்வுக்கு  கறுப்பு நிற பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.