தமிழ்நாடு அரசு தங்களது அதிகார எல்லைக்குள் இருக்க வேண்டும் - எச்.ராஜா பரபரப்பு பேட்டி

 
h.raja

தமிழ்நாடு அரசு தங்களது அதிகார எல்லைக்குள் இருக்க வேண்டும் எனவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக எம்.பிக்கள் குழுவினரை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்புவது தேவையற்றது எனவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 134 வார்டில் வென்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தின் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மேற்குமாம்பலத்தில் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமாலை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட ஏராளமான பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

h.raja

விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர்  எச்.ராஜா, உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தொடர்ந்து மாணவர்கள் அழைத்து வரப்படுவதாகவும், தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு உக்ரைன் அண்டை நாடுகளுக்கு எம்பிக்கள் குழுவினரை அனுப்பவது தேவையற்றது எனவும் விமர்சித்தார். தமிழ்நாடு அரசு தனது அதிகார எல்லைக்குள் இருக்க வேண்டும் என கூறினார். 

h.raja

5 மாநில தேர்தல் பொறுத்தவரை போட்டி இருப்பது பஞ்சாப்பில் மட்டும் தான் எனவும், மீதமுள்ள இடங்களில் எளிமையாக பாஜக வென்றுவிடும் எனவூம் எச்.ராஜா தெரிவித்தார்.  திமுகவினர் மத்திய அரசை எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பதாக தெரிவித்த எச்.ராஜா,  உள்ளாட்சித் தேர்தலில் வென்றுள்ள பாஜகவினர் மற்ற கட்சியினர் போல் இல்லாமல் நேர்மையாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.