தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ. 9 கோடி மோசடி - இருவர் பணியிடை நீக்கம்

 
tn

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ.9 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

tn

தமிழக சுற்றுலாத்துறை தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுலாத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான கொள்கைகளை உருவாக்கி, மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான திட்டங்களை சுற்றுலா ஆணையர் செயல்படுத்துகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) என்பது அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும், இது புதுமையான திட்டங்களை உருவாக்கி சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையானது மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சிக்காக அரசு துறைகள்/நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கிறது.

money

இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் ரூ.9 கோடி கையாடல் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.  இப்புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாத்துறையில் பணம் கையாடல் தொடர்பாக துணை மேலாளர் ஆனந்தன்,  ஹரிஹரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  அப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளராக பணிபுரிந்து வந்த சைமன் சாக்கோ 2020ல் உயிரிழந்த நிலையில் அவரின் கையெழுத்தை பயன்படுத்தி ஆனந்தன், ஹரிஹரன் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது . இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் துணை மேலாளர் ஆனந்தன், ஹரிஹரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.