கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கைகளும் ஒப்படைப்பு

 
srimathi srimathi

நீதிமன்ற உத்தரவின் படி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கைகளும் ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து,  வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது.  பள்ளியில் நடைபெற்ற  கலவரம் தொடர்பாக  300ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் மாணவி இறப்பு வழக்கில்  பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக உடற்கூறாய்வு நடைபெற்றது. 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கைகளும் ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி 2 உடற்கூறாய்வு அறிக்கைகளையும் சிபிசிஐடி போலீசார் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். .