கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் முறையாக பின்பற்ற வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma subramanian

தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் மக்கள் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் முறையாக பின்பற்ற வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். 

கம்பர் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழக அரசு சார்பில் கம்பர் விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கம்பர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்.அவரின் கவி திறமையை உலகம் முழுக்கும் அறிவார்கள்.

ma subramanian

தமிழகத்தில் ஏற்கனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது. பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது தமிழகத்தில் இல்லை. 
முதல்வர் தலைமையில் உயர் மட்ட குழு  கூட்டம் நடத்தி தற்போது உள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கொள்வதற்கு குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.நாம் இன்னும் முழு அளவில் தொற்றில்  இருந்து மீண்டு வரவில்லை. எனவே பொது மக்கள்  தமிழக அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் வரும் சனிக்கிழமை 26 வது மெகா தடுப்பூசி முகாம் 50 அயிரம் இடங்களில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.