#Breaking அதிமுக பொதுக்குழு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

 
EPS , OPS

அதிமுக பொதுக்குழு வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Madras Court

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும்  ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார் இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றாகிவிட்டது.  இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் . இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி சுந்தர் மோகன் ஆகிய ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், சான்று அளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான  மூன்று மனுக்களையும் இன்று பட்டியலிடும்படி பதிவு துறைக்கு உத்தரவிட்டனர்.அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான  விசாரணை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

ops eps

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று தொடங்கிய நிலையில் ஓ. பன்னீர்செல்வம் -  எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்று விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.  மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.