தி.மு.க. ஆட்சியில் மதவாதிகளின் ஆதிக்கம் அதிகரிப்பு - அர்ஜூன் சம்பத்

 
arjun sampath

தி.மு.க. ஆட்சியில் மதவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி 4 ஆண்டுகள் ராணுவத்தில் செயல்படும் வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளார். ஆனால் மதவாத அமைப்புகள் இந்த விவகாரத்தை திசை திருப்பி கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றன. இளைஞர்கள் 2 ஆண்டுகளாவது ராணுவத்தில் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்பது ஹிந்து மக்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கை. அக்னிபத் திட்டம் மூலம் அனைத்து இளைஞர்களும் ராணுவ பயிற்சி பெறும் வாய்ப்பை அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழக இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் சேர வேண்டும்.

தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், அ.தி.மு.க.,வில் தற்போது நிலவும் இரட்டைத்தலைமை, ஒற்றைத் தலைமை மோதல் ஒரு பிரச்னையே இல்லை. அ.திமு.க.,வினர் இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பர். திண்டுக்கல் மலைக்கோட்டை கோயில் அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.திண்டுக்கல் மண் வளம் தோல் தொழிற்சாலைகளால் பாதிப்பு அடைந்துள்ளது. கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஹிந்து சமய கடவுள்களை அவமதிப்பதை கண்டித்து சென்னையில் ஜுலை 2 பேரணி நடக்கவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.