வருகிற 19ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை!!

 
ttn

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடம்பூர் பேரூராட்சி தவிர்த்து , 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.  21மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இதையொட்டி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. 

election

வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும். விடுப்பு எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தமோ,  சம்பளக் குறைப்போ இருக்க கூடாது எனவும், உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

koyambedu

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு காய்கறி அனைத்து சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாளான 19 ஆம் தேதி அன்று, தேர்தல் நடைபெறும்  இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.