ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

 
tn

மே மாதம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்  ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை இந்த செய்தி குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.

பொதுவாக வங்கிகள் இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை,  நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாநில விடுமுறைகள் , உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது . வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.  அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறை விடப்படுவது இல்லை. அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. 

bank

இந்நிலையில் ஜூன்   மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் மாத விடுமுறை நாட்களின் பட்டியல் :- 

ஜூன் 5: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 11: இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 12: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 19: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 25: நான்காவது சனிக்கிழமை
ஜூன் 26: ஞாயிற்றுக்கிழமை

bank

இதுமட்டுமின்றி ஜூன் 2 ஆம் தேதி மகாராணா பிரதாப் ஜெயந்தி அன்று ஷில்லாங்கில்  வங்கிகளுக்கு விடுமுறை என்றும்  ஜூன் 15ஆம் தேதி குரு ஹர்கோபிந்த் ஜி பிறந்த நாள் மற்றும்  ராஜா சங்கராந்தியை முன்னிட்டு ஐஸாவ்ல், புபவேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.