#Breaking தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும்?

 
appavu

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

govt

2022-23 ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட  தலைவர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

stalin 

இந்நிலையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து  தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு செய்வதற்கான அலுவல் கூட்டத்தில்  வரும் 19 ஆம் தேதி வரை சட்டப்பேரவை  கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.