"எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான்"- முதலமைச்சர் ஸ்டாலின்

 
stalin

கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.662.50 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

mk stalin

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "கொளத்தூர் தொகுதியை போன்று அனைத்து தொகுதிகளுக்குமே முக்கியத்துவம்.உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய கோரிக்கைகளை அனுப்ப எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.  சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள். விமர்சனங்களை நினைத்து கவலைப்பட மாட்டேன், விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான். எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்தவன் நான்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன்; சொந்த கட்சியின் குளறுபடிகளை மறைக்க திமுக ஆட்சியை விமர்சிக்கின்றனர்; ஓராண்டில் ஓராயிரம் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

stalin

மற்ற மாநிலங்கள் நம் மாநிலத்தை கூர்ந்து கவனித்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்; இங்கு இருக்கக்கூடிய சிலரால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை.  என்ன செய்தோம் என கேட்பவர்களுக்கு இங்கு நான் கம்பீரமாக கூறிக்கொள்கிறேன் ஏதோ சிலருக்கு உதவிகளை செய்து 'கணக்கு காட்டுபவர்கள் நாங்கள் அல்ல; மக்களுக்கு கணக்கில்லாத உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்துத்தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும். வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல பாஜக, அதிமுக என அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன்; இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.ஆனால் அவர்கள் இத்திட்டத்திற்கு பாராட்டவில்லையே என்று நான் நினைக்க மாட்டேன்; அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல என்றார்.