i am a தமிழ்பேசும் indian -கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்

 
yu

இந்தி திணிப்பு பிரச்சனை தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்தபோது,  ‘’இந்தி தெரியாத போடா’’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வந்தனர் தமிழர்கள். இந்தி தெரியாது போடா என்ற டீசர்ட் அணிந்து பல பிரபலங்களும் அந்த போட்டோக்களை தங்களது வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்தனர்.

yu

 இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அப்போது,  ஐ எம் எ தமிழ்பேசும் இந்தியன் என்ற டீசர்ட் அணிந்து அந்த போட்டோவை வெளியிட்டிருந்தது அப்போது பரபரப்பாக இருந்தது .   இந்நிலையில் மீண்டும் அவர்,    ’’நான் கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்’’ என்று தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு கருப்பு லுங்கி கருப்பு டீசர்ட் அணிந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ,  ஆங்கிலத்துக்கு மாற்றான இணைப்பு மொழி இந்திதான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியதற்கு எதிராக தமிழ்தான் இணைப்பு மொழி என்று  சொல்லி ஏ. ஆர் .ரகுமான் தமிழர்களிடையே பெரும் வரவேற்புக்கு உரியவராக உள்ளார்.  ஏ. ஆர். ரகுமானின் கருத்து மீடியாக்களில் பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. 

uv

 இந்த நிலையில் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கும் யுவன்சங்கர்ராஜா,    கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது வைரலாகி வருகிறது.   பலரும் இதற்கு வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  

பிரதமர் மோடிக்கு மோடியை புகழ்ந்து பேசியதால் இளையராஜா  கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்,   யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவினால் அவரை தூக்கிக் கொண்டாடி வருகின்றனர் தமிழர்கள்.   இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த  பதிவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கருத்து கேட்டதால்,  கடுப்பான அவர் அவர் கருப்பு என்றால் நான் அதை விட கருப்பு நான் அண்டங்காக்கா கருப்பு என்று தெரிவித்திருக்கிறார்.

ann

யுவன்சங்கர் ராஜாவை விட நான் கருப்பு தமிழன். யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்பு திராவிடன்.  அவர் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. அதனால் இனிமேல் யுவன்சங்கர் ராஜா  பீச் பக்கம் வாக்கிங் போகும்போது கருப்பு லுங்கி கருப்பு டீ சர்ட் அணிந்தது பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் என்றார்.