கேம்பஸ் இன்டெர்வியூவில் கலக்கிய சென்னை ஐஐடி.. சம்பளம் ரூ. 1.98 கோடியாம்..

 
iit

சென்னை ஐஐடியில்  இந்த  ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள்  கேம்பஸ் இண்டவியூக்கள் மூலம்  வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது  2021-  2022 வது கல்வி ஆண்டில் படித்த மாணவர்களில் சுமார் 1430 பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் சிறந்த உயர்க்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்திலிருந்து வருகிறது. பொதுவாக உயர் கல்வி பயிலும் மாணவர்கள் வேலை வாய்ப்பை முன்னிறுத்தியே கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பர். அந்த வகையில் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சென்னை ஐஐடியில் இருந்து இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.   2021 - 2022 ஆம் கல்வியாண்டில் சென்னை ஐஐடியில்   படித்த மாணவர்களில் சுமார் 1, 199 பேரை,  380 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூகள் மூலம் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

IIT Chennai

அதேபோல் 231 மாணவர்கள் முன் வேலைவாய்ப்பு சலுகைகளையும் பெற்றுள்ளனர் .  இண்டெர்ன்ஷிப் உள்ளிட்டவற்றை எல்லாம் சேர்த்தால் சுமார் 1,430 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.   இந்தியாவில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ளது.  அதேபோல் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்து இருக்கிறது.  இந்த நிலையில் சென்னை ஐஐடியில் படித்து வேலைவாய்ப்பை பெற்றவர்களின் விவரங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.  அத்துடன்  கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் காட்டிலும் கடந்த கல்வியாண்டில்  ( 2021 - 2022 ) அதிகமானோர் வேலையில் சேர்ந்து உள்ளது தெரிய வந்திருக்கிறது.  கேம்பஸ் இன்டர்வியூ நடத்திய 380 நிறுவனங்களில் 14 வெளிநாட்டு நிறுவனங்கள். அவற்றில் மட்டும்  45 பேர் தேர்வாகி இருக்கின்றனர்.  அதேபோல் 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி இருக்கின்றன.  

கேம்பஸ் இன்டெர்வியூவில் கலக்கிய சென்னை ஐஐடி.. சம்பளம் ரூ. 1.98 கோடியாம்..

இந்த ஆண்டில் 61  எம்பிஏ மாணவர்களும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியுள்ளனர் . அதிலும் ஆய்வு துறையில் 100% மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாகியிருக்கிறது.  இவ்வாறு தேர்வாகி இருக்கும் மாணவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.  21.48 லட்சம் ஆகும் . அதாவது   மாதத்திற்கு ரூ  70,000 அதிகமாக ஊதியம் கிடைக்கும் .  இதுவே அதிகபட்ச ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 1.98 கோடி வரை வழங்கப்படுகிறது.  மேலும் பதிவு செய்த மாணவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக சென்னை ஐஐடி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.