ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்குமா பெங்களூரு ?

 
RRvsRCB

ஐ.பி.எல். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 13-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பாப் டூபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Rajasthan

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதேபோல் இரண்டாவது போட்டியில் மும்பை அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பேட்டிங்கை பொறுத்த வரையில், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ஜேஸ்வால், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இதேபோல் பந்துவீச்சில் ப்ரதீப் கிருஷ்ணா, டிரண்ட் போல்டு, சைனி, அஷ்வின், சஹால்  ஆகியோர் நம்பிக்கை அளிப்பார்கள். 

RCB

பெங்களூரு அணி தனது முதலாவது போட்டியில் பஞ்சாப் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் பெங்களூரு அணி 205 ரன்கள் எடுத்திருந்த போதும் மோசமான பந்துவீச்சின் காரணமாக தோல்வி அடைந்தனர். இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பேட்டிங்கை பொறுத்தவரை பாப் டூபிளெசிஸ், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் ஹர்சால் பட்டேல், ஹசரங்கா, சபாஷ் அஹமது ஆகியோர் நம்பிக்கை அளிப்பார்கள். புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 7-வது இடத்தில் உள்ளது.