பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு!!

 
School Education

பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,06,277 
 மாணவியர்களின் எண்ணிக்கை :421,622
 மாணவர்களின் எண்ணிக்கை:3,84,655

tn

தேர்ச்சி விவரங்கள் 

தேர்ச்சிப் பெற்றவர்கள் :7,55,998(93.76%) * மாணவியர் 4,06,105(96.32%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* மாணவர்கள் 3,49,893(90.96%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* மாணவர்களை விட மாணவியர் 5.36% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

 கடந்த மார்ச் - 2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 7,99,71. தேர்ச்சிப் பெற்றோர் 7,20,209. தேர்ச்சிச் சதவிகிதம் 923%

rn

இந்நிலையில் பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  12ம் வகுப்பிற்கு  ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும் 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 34. கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்விற்கு வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 428 என்பது குறிப்பிடத்தக்கது.