டி20 உலக கோப்பை - இலங்கைக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து

 
SRI vs IRE

டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 128 ரன்கள் குவித்துள்ளது. 

8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறின.  இந்நிலையில் நேற்று சூப்பர் 12 சுற்று தொடங்கியது. 

இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெரி டெக்கர் 45 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் மகேஷ் தீக்‌ஷனா மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.