கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை!!

 
tn

கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையில் சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது! கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் -2013, படி தங்கள் வீடுகளிலுள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவுநீர் பாதையினுள் இறங்கி (Sewer line) சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டணைக்குரிய குற்றமாகும். 

corporation

ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் அல்லது கழிவு நீர் பாதை (sewer line) சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வீட்டு உரிமையாளர் / கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரரே பொறுப்பாவார்கள்.

சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர்/ ஒப்பந்ததாரர் மீது காவல்துறை மூலம் FIR பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

tn


செப்டிக் டேங்க் அல்லது கழிவுநீர் பாதை (sewer line) சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் இறந்தவரின் குடும்பத்தை சார்ந்த வாரிசுதாரர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும்.
கழிவுநீர் பாதை (sewer line) மற்றும் செப்டிக் தொட்டிகள் இயந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும்.

மனிதர்கள் மூலம் கழிவுநீர் பாதை (sewer line) அடைப்பு அகற்றுவதை மற்றும் செப்டிக் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்டறிந்தால் உடனடியாக கட்டணமில்லா அழைப்பு எண் 14420 ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

செப்டிக் தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்கு மற்றும் அடைப்பு அகற்றுவதற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி எண்- 044-45674567. வார்டு (டெப்போ ) 1 முதல் 200 வரை தொலைபேசி எண்கள் - 8144930001 முதல் 8144930200." என்று கூறியுள்ளது.