#JUSTIN அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - தென்னக ரயில்வே

 
tn

அமிர்தா எக்ஸ்பிரஸ் இனி ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

tn


அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் - மதுரை இடையே பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கி வருகிறது . இது தினந்தோறும் இரவு 8:20 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு பாலக்காடு சந்திப்பு வழியாக 11.50 மணிக்கு மதுரையை அடைகிறது.  அதேபோல் மதுரை - திருவனந்தபுரம் இடையே தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு,  மறுநாள் 5 :15 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகிறது. கோடை விடுமுறை காலத்தில் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கூட்டத்தை சமாளிக்க கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டன.

tn

இந்நிலையில்  மதுரை - திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் - மதுரை - திருவனந்தபுரம் வ.எண் 16343/16344  சோதனை அடிப்படையில் மூன்று மாதத்திற்கு ஒட்டன்சத்திரத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், தனது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மதுரை அமிர்தா விரைவுவண்டி ஒட்டன்சத்திரத்தில் நிற்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.