#Breaking ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
thammambatti jallikattu

 2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Jallikattu

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும்  பொங்கல் பண்டிகையின் போட்டியின் போது மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெறும். இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்க கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. அந்த வகையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா?  என்ற சந்தேகம் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இருந்து வந்தன.

govt

இந்நிலையில் திட்டமிட்டபடி 2023ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்  என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை கூறிய வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை  உறுதி தெரிவித்துள்ளது.  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , ஜனவரி 14ஆம் தேதி அவினியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு,  16ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு உறுதிப்பட தெரிவித்துள்ளது.