திருச்சியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜெயக்குமார்

 
jayakumar

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி  திருச்சி  காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். 

jayakumar

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  நிலையில் கடந்த 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஜெயக்குமார் திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனைஇ விதிக்கப்பட்டது.   இதை தொடர்ந்து ஜெயக்குமாருக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து,  சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

jayakumar

இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என 3 வழக்குகளில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அதிமுக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி  திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற,   ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.