ஜெயலலிதா நினைவு தினம்: ஓபிஎஸ் பேரணியாக சென்று அஞ்சலி..

 
OPS

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெ.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாக சென்று அஞ்சலி செலுத்துகிறார்.  

ops

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் இன்று 6வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி தலைவர்கள் , தொண்டர்கள் பலரும், சென்னை மெரினா கடற்கறையில் அமைந்துள்ள  ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   அதிமுகவினரை பொறுத்தவரை, இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா, டிடிவி தினகரன் என 4 அணிகளாக பிரிந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.  

OPS

அந்தவகையில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  அங்கிருந்து  கருப்பு சட்டை  அணிந்து சேப்பாக்கம் ஸ்டேடியம்  வந்த ஓபிஎஸ்,   தனது ஆதரவாளர்களுடன்  சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாக நடந்து சென்றனர். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.  சுமார் 500  முதல் 700 ஆதாரவாளர்கள் ஓபிஎஸ் பேரணியில் கலந்துகொண்டனர்.