"ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை காலதாமதம் செய்யவில்லை" : ஆறுமுகசாமி பேட்டி!!

 
Arumugasamy

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை காலதாமதம் செய்யவில்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்தது ஆறுமுகசாமி ஆணையம்.  கடந்த ஐந்து ஆண்டுகள் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.  இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் பெற்ற இடைக்கால தடையின் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்ளாமல் இருந்தது. இதையடுத்து மீண்டும் விசாரணை தொடங்கிய ஆணையமானது இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

tn

இந்நிலையில் இன்று ஜெயலலிதா மரண வழக்கில் விசாரணை குறித்து ஆணைய தலைவர் ஆறுமுகசாமி சென்னையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் , ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்த விதத்தில் சந்தேகத்தன்மையான எதுவும் இல்லை அதனால் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்யவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விசாரணை நடைபெற்றது . மனுதாரர் உட்பட 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது. ஆங்கிலத்தில் 500 பக்கமும் , தமிழில் 608 பக்கமும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் ஆணையும் எந்தவித தாமதமும் செய்யவில்லை. ஆறுமுகசாமி ஆணையும் ஒரு நீதிமன்றம் போலவே செயல்பட்டதாக உச்ச நீதிமன்றமே கூறியது.

tn

சசிகலா நேரில் வர தயார் இல்லை என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சையை நேரில் ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவக் குழு இதுவரை ஆறு அறிக்கையை கொடுத்துள்ளது அறிக்கையில் என்ன உள்ளது என்பதை நான் கூற இயலாது: விசாரணைக்கு சசிகலா தரப்பு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றார்.