"கள்ளக்குறிச்சி மாணவி மரணமும் , வன்முறையும்" - முதலமைச்சர் ஆலோசனை!!

 
nt

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

stalin

கள்ளக்குறிச்சி விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.  மாணவி  ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வன்முறை வெடித்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இது தொடர்பாக இதுவரை 379 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.  சோகமான சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு சிலர் சட்ட விரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானது.  பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீக்கிரையான சான்றிதழ்களை திரும்ப வழங்க வருவாய்த்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.