ஒருங்கிணைந்த இரத்ததான திட்டம் - கமல் ஹாசன் ட்வீட்!!

 
tn

கடந்த 13ஆம் தேதி மக்கள் நீதி மய்யத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  ஒருங்கிணைந்த இரத்ததான திட்டத்தை துவக்கி வைத்தார். நாற்பது ஆண்டுகளாக தனது நற்பணி இயக்கம் மூலமாக நடந்த இத்திட்டம் கட்சியின் ஒரு பணியாக விரிவு படுத்தப்பட்டது என்றும் அவர் அறிவித்தார். இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக சென்னையில் மட்டும்  இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

kamal-23

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , " உயிரே, உறவே, தமிழே, வணக்கம். எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகின்றன.எங்கள் நற்பணி நாயகர்கள் தொடர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காத்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படு வோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ‘Kamal's Blood Commune' உருவாக்கியுள்ளோம். தமிழில் ‘கமல் குருதிக்கொடை குழு'.

tn
இதன் மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். 9150208889 எனும் பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுபவருக்குத் துரிதமாக உதவ முடியும். ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும் இந்த எண்ணை அழைத்து தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். ரத்த தானம் செய்வதற்குரிய உடல் ஆரோக்யம் கொண்டவர்கள் இந்த அரும்பணியில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குருதிக்கொடையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவைத் தொடங்கி ரத்ததானம் செய்வது பாராட்டுக்குரிய முன்னோடி முயற்சி. இதனை முன்னெடுத்த மக்கள் நீதி மய்யத்தினரை மனதாரப் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.