கனல் கண்ணனின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

 
kanal kannan

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த வழக்கில் கனல் கண்ணன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. 

இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கடந்த ஒன்றாம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோவிலில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என கூறினாஅர். கனல்  கண்ணனின் இந்த சர்ச்சை பேச்சை அடுத்து சென்னை பேப்பரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார்.  இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். ஆகஸ்ட் 15-ம் தேதியன்று கனல் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

high court

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் தாக்கல் செய்த மனுவை எழுப்பூர் நீதிமன்றமும், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன. அதையடுத்து கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனல் கண்ணன் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கனல் கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.