கண்ணதாசன் 96வது பிறந்தநாள் : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை..

 
கவியரசு கண்ணதாசனின் 96வது  பிறந்தநாளை முன்னிட்டு  சென்னை தி.நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.    கவியரசு கண்ணதாசனின் 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில்  பிறந்தவர் கண்ணதாசன். முத்தையா எனும் இயற்பெயர் கொண்ட இவர்,  சிறு வயது முதலே எழுத்தாற்றல், புத்தக வாசித்தலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.  அதன்பேரிலேயே  பின்நாளில் கவிதைகள், இலக்கியம், சிறுகதைகள், நாடகங்கள் போன்றவற்றில் தனித்தன்மையோடு சிறந்து விளங்கினார். திருமகள், திரைஒலி, மேதாவி, சண்டமாருதம், தென்றல், கண்ணதாசன் மாத இதழ், கடிதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக  பணியாற்றிய அவர்,  மாங்கனி, ஆட்டனத்தி - ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி ஆகிய மிகச் சிறந்த காவியங்களையும் படைத்தார்.  மேலும் 20க்கும் மேற்பட்ட நவீனங்கள் மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதியிருக்கிறார்.    குறிப்பாக, அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியவை  வாசகர்களின் ஏகோமித்த  வரவேற்பைப் பெற்றது. இவரது “அழகி” என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு  செய்யப்பட்டுள்ளது.  மேலும், தமிழகத் திரையுலகில்  புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் விளங்கினார்.   10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்  எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.  1970 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது  வென்ற அவர், 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞரானார்.  1979 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 24ஆம் நாள் அவருடைய பிறந்த நாளுக்குச் சிறப்புச் சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று  கவியரசு கண்ணதாசன் அவர்களின் 96ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,  காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராயர் நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள  அவரது   திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் , அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

கவியரசு கண்ணதாசனின் 96வது  பிறந்தநாளை முன்னிட்டு  சென்னை தி.நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

கண்ணதாசன் 96வது பிறந்தநாள் :  தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை..

கவியரசு கண்ணதாசனின் 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில்  பிறந்தவர் கண்ணதாசன். முத்தையா எனும் இயற்பெயர் கொண்ட இவர்,  சிறு வயது முதலே எழுத்தாற்றல், புத்தக வாசித்தலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.  அதன்பேரிலேயே  பின்நாளில் கவிதைகள், இலக்கியம், சிறுகதைகள், நாடகங்கள் போன்றவற்றில் தனித்தன்மையோடு சிறந்து விளங்கினார். திருமகள், திரைஒலி, மேதாவி, சண்டமாருதம், தென்றல், கண்ணதாசன் மாத இதழ், கடிதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக  பணியாற்றிய அவர்,  மாங்கனி, ஆட்டனத்தி - ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி ஆகிய மிகச் சிறந்த காவியங்களையும் படைத்தார்.  மேலும் 20க்கும் மேற்பட்ட நவீனங்கள் மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதியிருக்கிறார்.  

​கண்ணதாசன் 96வது பிறந்தநாள் : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை.. [Click and drag to move] ​

குறிப்பாக, அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியவை  வாசகர்களின் ஏகோமித்த  வரவேற்பைப் பெற்றது. இவரது “அழகி” என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு  செய்யப்பட்டுள்ளது.  மேலும், தமிழகத் திரையுலகில்  புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் விளங்கினார்.   10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்  எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.  1970 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது  வென்ற அவர், 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞரானார்.  1979 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

​கண்ணதாசன் 96வது பிறந்தநாள் : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை..

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 24ஆம் நாள் அவருடைய பிறந்த நாளுக்குச் சிறப்புச் சேர்க்கின்ற வகையில், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட இடங்களில்  தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று  கவியரசு கண்ணதாசன் அவர்களின் 96ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,  காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராயர் நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள  அவரது   திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் , அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.