’அது ராஜ்பவனின் மேட்டிமை.. இது சட்டமன்றத்தின் உரிமை’ - கவிஞர் வைரமுத்து ட்வீட்

 
சாத்தான்குளம் மரணம்… நாம் வாழ்வது பிரிட்டிஷ் இந்தியாவிலா… சுதந்திர இந்தியாவிலா? – கவிஞர் வைரமுத்து உருக்கம்

நீட் விலக்கு சட்ட மசோதாவை  ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், ‘ திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை, மீண்டும் அனுப்புவது சட்ட மன்றத்தின் உரிமை என  கவிஞர்  வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  முன்னதாக தமிழக அரசு சட்டபேரவையில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டு நீட் விலக்கு மசோதா தமிழ்கா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  நீண்ட காலமாக இதுகுறித்து மௌனம் சாதித்து வந்த ஆளுநர் நேற்று  நீட் விலக்கு சட்ட மசோதாவை  திருப்பி அனுப்பினார்.  ஆளுநரின் இந்த செயல் தமிழக  அரசியல் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி நாளை டெல்லி பயணம்!

இதனைத்தொடர்ந்து  அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க   நாளை  ( 5-ம் தேதி )  காலை 11 மணிக்கு சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின  அழைப்பு விடுத்திருக்கிறார்.  இந்த சம்பவத்தைக் கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது பாணியில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில்

“திருப்பி அனுப்புவது
ராஜ்பவனின் மேட்டிமை
மீண்டும் அனுப்புவது
சட்டமன்றத்தின் உரிமை

நீட் தேர்வு

நாளை
முதலமைச்சர் கூட்டும்
அனைத்துக்கட்சிக்
கூட்டத்தின் முடிவை

ராஜ்பவனும்
ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல

இருள்கட்டிக் கிடக்கும்
ஏழைக் குடிகளின்
ஓலைக் குடிசைகளும்
கண்ணில் நீரோடு
கவனிக்கின்றன “ என்று குறிப்பிட்டிருக்கிறார்.