கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உயிரிழப்பு - ஓபிஎஸ் இரங்கல்

 
OPS

கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Helicopter

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் இருந்து  தனியார் நிறுவனமான அயன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டுள்ளது. 6 பேருடன்  கேதார்நாத்தில் இருந்து பாடா ஹெலிபேடுக்கு சென்ற ஹெலிகாப்டர் கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேர் பலியாகினர். இதில்  சென்னை அண்ணாநகரை  சேர்ந்த சுஜாதா(56), கலா (50), மற்றும் பிரேம்குமார் (63) உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இவர்களை, தவிர குஜராத் மாநிலம் பாவ் நகரச் சேர்ந்த மூவரும் பலியாகினர். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.



இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்களை அழைத்துச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த திருவாளர்கள் பிரேம்குமார், சுஜாதா மற்றும் கலா ஆகிய 3 பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.