கேதார்நாத் கோயிலுக்கு சென்ற 6 பக்தர்கள் உயிரிழப்பு - ஜி.கே. வாசன் இரங்கல்

 
tn

கேதார்நாத் கோயிலுக்கு சென்ற 6 பக்தர்கள் மற்றும் ஒரு பைலட் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது  என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு சென்ற 6 பக்தர்கள் மற்றும் ஒரு பைலட் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது . வருத்தம் அளிக்கிறது . கேதார்நாத் கோயிலுக்கு செல்ல இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது . கேதார்நாத் கோயிலுக்கு தரிசனம் செய்ய தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் பக்தர்கள் சென்றனர் . 

tn

தரிசனம் முடிந்த பிறகு பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது . குறிப்பாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் சென்னையில் இருந்து கோயிலுக்குச் சென்ற 3 பக்தர்கள் உட்பட 6 பக்தர்கள் , ஒரு பைலட் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர் . இதனால் கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து , துயரமுற்றனர் . தமிழகத்தின் சென்னையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது . 

gk

உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினர் மீளாத்துயரத்தில் இருக்கின்றனர் . உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த 3 பேரின் உடலை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க , சென்னைக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் விரைவு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் .  உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த 3 பக்தர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.