கீழடி அகழ்வைப்பக கட்டுமான பணி நிறைவு பெறுவது எப்போது?

 
velu

கீழடி அகழ்வைப்பக கட்டுமான பணி மே 30-க்குள் முடிவடையும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

tn

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடி ,அகரம், மணலூர் , கொந்தகை ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  இதில் இருந்து பல ஆயிரக்கணக்கான பழந்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு,  அவை கொந்தகை கிராமத்தில்  சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அகழ் வைப்பகத்தில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதன்படி 11.3 கோடி செலவில் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.

tn

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அகழ்வைப்பகம் கட்டுமான பணிகள் மார்ச் மாதம் இறுதியில் முடிந்து திறக்கப்படும் என்று எதிர்பார்த்தோம்.  ஆனால் பணி சுமை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்று கொண்டிருப்பதால்,  மே மாதம் 30ஆம் தேதி அகழ்வைப்பகம் கட்டும் பணிகள் நிறைவடையும் என்றார்.  இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகத் துறை அமைச்சர் மூர்த்தி ,மானாமதுரை எம்எல்ஏ  தமிழரசி மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.