கேந்திரிய வித்யாலயா பள்ளி - எம்.பி. மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு ரத்து!!!

 
tn

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 1248  கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  பொதுவாக மத்திய அரசு பள்ளிகளில் எம்.பி.க்களின் சிறப்பு ஒதுக்கீடு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.  ஒரு எம்.பி. 10 மாணவர்கள்  வரை ஒரு பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்ய முடியும்.  அந்த வகையில் மக்களவையில் 543 எம்.பி.க்களும் , மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களும் என மொத்தம் 788 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கையில் மூலம் சுமார் 7 ஆயிரத்து 880 மாணவர்களை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பரிந்துரையின் அடிப்படையில் சேர்க்க முடியும்.

tn

எம்.பி.க்கள் மட்டுமன்றி மாவட்ட ஆட்சியர்கள்  பரிந்துரையின் அடிப்படையிலும் இப்பள்ளிகளில் சேர்க்க முடியும் என்பதால் ஒரு மாவட்ட ஆட்சியர் 17 மாணவர்களை பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது. இந்த சூழலில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான மத்திய கல்வி அமைச்சருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் அண்மையில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு உட்பட அனைத்து சிறப்பு ஒதுக்கீடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

tn

இந்நிலையில் அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்  வெளியிடப்பட்டன. அதன்படி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும்,  மத்திய கல்வி அமைச்சர் பணியாளர்களின் 100 குழந்தைகளுக்கான ஒதுக்கீடு எம்.பி.க்களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு ,ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா பணியாளர்களுக்கான ஒதுக்கீடு ,பள்ளி நிர்வாகக் குழு தலைவருமான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவை ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

tn
அதேசமயம் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா ,வீர் சக்ரா ,அசோக சக்ரா ,கீர்த்தி சக்ரா, சௌர்ய விருது  வென்ற  குழந்தைகள்,  தேசிய வீரதீர செயல்கள் விருது பெறும் சிறார்கள் , ரா உளவு அமைப்பை சேர்ந்தவர்களின் 15 குழந்தைகள்,  ஓய்வு பெறுவதற்கு முன்பாக உயிரிழக்கும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள் , நுண்கலைகளில் சிறப்பு திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ஆகியோருக்கு மட்டுமே ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ்  திட்டத்தின்கீழ் இப்பள்ளிகளில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயர்களையும் பரிசீலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.