தீபாவளி பண்டிகை - கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 25ஆம் தேதி விடுமுறை!!

 
Koyambedu

கோயம்பேடு காய்கறி சந்தை 25ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Koyambedu

சென்னை கோயம்பேடு சந்தை மொத்த வியாபார சந்தைகளில் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது.  இங்கு சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்று விற்பனை  செய்து வருவது வழக்கம்.  அத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை வாங்கி  சில்லறை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கோயம்பேடு சந்தை எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

koyambedu
இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி கோயம்பேடு சந்தை காய்கறி சந்தை வருகிற 25ஆம் தேதி விடுமுறை விடப்படும் என்று அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  கோயம்பேடு காய்கறி சந்தையில் பணி செய்து வரும் வியாபாரிகள்,  தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அதே சமயம் கோயம்பேட்டில் உள்ள பூ சந்தை,  பழம் சந்தை ஆகியவை 25 ஆம் தேதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.