நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைத்தார்... ஆனால் அவரால் முடியவில்லை - எல்.முருகன்

 
L Murugan

நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைத்ததாகவும், ஆனால் அவரால் அது முடியவில்லை எனவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 
 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 48வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நேருவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒழிக்க நினைத்தார், ஆனால் முடியவில்லை. தனிமனிதர்களால் ஆர்எஸ்எஸ் ஒழிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் நேற்று வந்த இயக்கம் அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்தவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இன்று அனைத்து வீடுகளிலும் பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டு, தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதற்கு காரணம் பிரதமர் மோடி. காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ஆகும். ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்பதற்கு மதிய உணவை அமல் படுத்தியவர். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் மிக பெரிய அனை கட்டப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேம்பாட்டுக்கு உட்கட்டமைப்பு பணிகளை செய்தது காமாரஜர் ஆட்சி காலத்தில் தான். இவ்வாறு கூறினார்.