"மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகள்" - ஜி.கே.வாசன் கோரிக்கை!!

 
ttn

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும். எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளி அதாவது எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நீக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதை பரிசீலிக்க வேண்டும் .  மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையில் இந்தியா முழவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநில மொழிகளில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது .  இதனால் ஆங்கில வழியில் மழலையர் கல்வியும் தொடர் மேற் வகுப்பு ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்பிப்பது மேல் வகுப்புகளில் மாணவர்கள் கல்வியை புரிந்துகொண்டு எளிதாக கற்பதற்கு வாய்பாக அமையும் . ஏழை , எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதின் மூலமாக பொருளாதார ரீதியாக பயனடைந்தனர்.

PM Schools

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் மழலையர் கல்வி ஏழை , எளிய மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம் ஆகும் . அதோடு அவர்கள் மேற்கொண்டு தொடர் வகுப்புகளை அரசு பள்ளிகளிலேயே தொடர் முடியும் . இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவ , மாணவிகளின் சேர்கை அதிகரிக்கும் , ஏழை , எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . தற்பொழுது தமிழக அரசு இந்த கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி.யு.கே.ஜி வகுப்புகள் ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர ஏழை , ஏளிய மக்களுக்கு அல்ல . அதோடு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய அதிக வாய்புள்ளது . தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை படிக்க வைத்துவிட்டு தொடர் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

gk

இதனால் அரசுப் பள்ளிகளுக்குதான் பாதிப்பு ஏற்படும் . இதனால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை , எளிய பெற்றோர்களும் . மாணவர்களுமே . ஆகவே ஏழை , எளிய மக்களின் பொருளாதார நிலையை மனதில் கொண்டும் , மாணவர்களின் தொடர் வகுப்புகள் தடைபடாமல் தொடரவும் தமிழக அரசு மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.