#Breaking "மீண்டும் ஒற்றுமையாக செயல்படுவோம்" - எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு!!

 
tn

அதிமுகவுடன் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்று  எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

tn


இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு எப்படி அன்புச்சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியை வழிநடத்தினோமோ, அந்த நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். கழகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது. அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது. அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது; அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை அனைத்தையும் மனங்களில் இருந்து தூக்கி எரிய வேண்டும். அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்து சிறப்பாக செயலாற்றினோம். 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முழு ஒத்துழைப்பு வழங்கினோம், அந்தநிலை  தொடர வேண்டும். மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வரவேண்டும் " என்றார்.

tn

முன்னதாக ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து வரும் ஓபிஎஸ், மீண்டும் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதே விருப்பம் என அழைப்பு விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.