ஓபிஎஸ்-சை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் !!

 
rn

எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பி.எஸ்-சை மாற்ற வலியுறுத்தி அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.

ops

அதிமுக பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  ஓபிஎஸ்-இன் அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டன. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த பொறுப்புகளுக்கு வேறு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். 

velumani

இதன் காரணமாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும் ஓபிஎஸ்-சிடம் இருந்து பறிக்கப்படும் என்ற சூழலில் சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் . அதிமுக தலைமை விவகாரம் குறித்த வழக்குகள் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் இருப்பதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட அதிமுக பதவிகளுக்கான மனுக்கள் ஏதேனும் வரும் பட்சத்தில் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . ஓபிஎஸ்-இன் கடிதம் பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

appavu

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வகித்து வரும்  ஓ. பன்னீர்செல்வத்தை மாற்றக்கோரி சபாநாயகர் அலுவலகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி கடிதம் அளித்துள்ளார். 
ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.